Harthik Pandiya Rohit Sharma [file image]
Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் செயலாற்றி வருகிறார்.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்ந்தெடுக்கும் ஒரு பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருப்பதால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐயின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அந்த சந்திப்பில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் வீரர்களை பற்றி பேசியதாக தெரிய வருகிறது. மேலும் அந்த சந்திப்பில், ஹர்திக் பாண்டியா போல சிறப்பான ஒரு ஆல்-ரவுண்டர் தற்போது ஃபார்மில் இல்லாதது வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
அதனால் முறையாக அவரை இதன் பிறகு நடக்கும் மும்பை அணியின் எல்லா போட்டியிலும் பந்து வீச வேண்டும் என்று அதனை பொறுத்தே அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வைப்பதை குறித்து முடிவெடுப்போம் என்று ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வாளர் அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை நடைபெற்ற மும்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா வெறும் 4 போட்டிகளில் மட்டும் பந்து வீசிய அவர் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பேட்டிங்கை பார்க்கையில் 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பேசி வருகின்றனர்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…