களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இன்று இந்திய விமானப்படையினர் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.

Ganga Expressway IAF

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல இந்திய விமானப்படையும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. அதில், உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பயிற்சி மேற்கொள்ளவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

ஏற்கனவே, உ.பியில், ஆக்ரா-லக்னோ, பூர்வாஞ்சல் மற்றும் பண்டேல்கண்ட் விரைவு சாலைகளை தொடர்ந்து, விமான ஓடுதளம் கொண்ட பாதையாக கங்கா அதிவிரைவு சாலை கட்டமைக்கப்ட்டு வந்தது.அந்த சாலையில் தற்போது இந்த சோதனை பயிற்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றுள்ளது.

594 கி.மீ தூரம் கொண்ட கங்கா அதிவிரைவு சாலையானது 3.5 கிமீ விமான ஓடுபாதையை கொண்டுள்ளது. இதில், ரஃபேல், மிராஜ்-2000, ஜாகுவார், SU-30 MKI, MiG-29, C-130J சூப்பர் ஹெர்குலஸ், AN-32, மற்றும் MI-17 V5 ஹெலிகாப்டர்கள் ஆகிய விமானப்படை விமானங்களின் புறப்படும் மற்றும் தரையிறங்கும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக இந்த புதிய மாற்றுப்பாதையின் நம்பகத்தன்மை ஒத்திகை பயிற்சியானது, போர்க்காலம் அல்லது தேசிய அவசரநிலைகளின் போது மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சற்று உற்றுநோக்கப்படுகிறது.

இந்த ஒத்திகை பயிற்சியானது பகல் மற்றும் இரவு நேரம் என இரு நேரங்களிலும் நடைபெற உள்ளது. பகல் மற்றும் இரவுகளில் போர் விமானங்களின் செயல்பாடுகளை சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான ஓடுதளம் உ.பி கங்கா அதிவிரைவு சாலையாகும்.

பகல்நேர பயிற்சிகள் முடிந்த பிறகு இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை பயிற்சி நடைபெறும். போர் விமானங்கள் ஒரு மீட்டர் உயரத்தில் தாழ்வாக பறக்கும், இதனை கண்காணிப்பதற்காக சுமார் 250 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கிடையில், உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (UPEIDA) இணைந்து செயல்படுகிறது. இந்த சாலையை தற்போது விமான ஓடுதளத்தை IAF தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்