கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!
சித்திரைப் பெருந்திருவிழாவில் மே 12ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிக விசை கொண்ட நீருந்துகள் (Pressure Pump) மூலம் தண்ணீர் பீய்ச்ச கூடாது.

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக்கடனுக்கு கோவில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அழகர் கோயிலில் சித்திரை விழா மே 8 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சித்திரைப் பெருந்திருவிழாவில் மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிக விசை கொண்ட நீருந்துகள் (Pressure Pump) மூலம் தண்ணீர் பீய்ச்ச கூடாது. ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி நீரை பீய்ச்சி அடிக்க அறிவுறுத்தியுள்ளனர். திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பீய்ச்சுமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவில் மே 6-இல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 8-இல் மீனாட்சி திருக்கல்யாணம், மே 9இல் தேரோட்டம் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண இன்று முதல் மே 2-ஆம் தேதி வரை கட்டணச் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.