அவர் கேட்ட முதல் கேள்வி …! நரைன் பற்றி மனம் திறந்த கவுதம் கம்பீர்!!

Published by
அகில் R

கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட  கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது  பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேச்சுகள் நிலவுகிறது.

இந்நிலையில், இவர் ஸ்போர்ட்ஸ்கீடா பத்திரிக்கைக்கு அளித்த ஒரு  பேட்டியில் சுனில் நரைனை குறித்தும், அவருடன் ஏற்பட்ட தருணங்களை குறித்தும் அதில் பகிர்ந்திருந்தார். அவர் பேசிய போது, “நானும் நரைனும் ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள் தான். 

எங்களுடைய உணர்ச்சிகளும் அப்படித்தான் இருக்கும். 2012-ல் சுனில் நரேன் முதன் முதலில் ஐபிஎல் தொடருக்காக ஜெய்ப்பூரில் கேகேஆர் அணிக்காக இணைந்தார். அந்த தருணம் எனக்கு இப்பொழுதும்  நினைவிருக்கிறது.

 நாங்கள் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். நான் அவரை மதிய உணவிற்கு வரச் சொன்னேன். அவர் மிகவும் வெட்கப்பட்டார், மதிய உணவின் போது அவர் ஒரு வார்த்தை கூட எண்ணிடமோ அல்லது வேறு யாருடனும்  பேசவில்லை.

 இறுதியில், அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதுதான் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அது என்னவென்றால், ‘நான் என் காதலியை ஐபிஎல்-க்கு அழைத்து வரலாமா?,” என்று கேட்டார். அதை நான் இன்னும் மறக்கவில்லை. மேலும், அன்றைய நாட்களில் அவர் என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார்.

ஆனால் இப்போது நாங்கள் எதை பற்றினாலும் பேசுகிறோம். அவரை நான் ஒரு நண்பரகவோ, அணியில் விளையாடும் ஒரு வீரராகவோ நினைக்கவில்லை. அவர் எனக்கு உடன் பிறந்த தம்பியை போன்றவர்“ ,என்று கம்பீர் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

16 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

20 minutes ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

1 hour ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

1 hour ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

3 hours ago