போட்டி ரத்து.. புள்ளி பட்டியலில் முதல் அணி வெற்றி.. ஐசிசி அறிவிப்பு..!

உலகக்கோப்பையின் லீக் கட்டத்தில் அனைத்து ஆட்டங்களும் முடிவடைந்துவிட்டன. இப்போது அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இரண்டாவது உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நாளை மறுநாள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பின்னர் இரு அணிகளும் நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

ரிசர்வ் நாள் அறிவித்த ஐசிசி :

வானிலை காரணமாக திட்டமிடப்பட்ட நாளில் ஆட்டம் நடைபெறுவதை தடுக்கும் பட்சத்தில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் என்னவாகும் என பல கிரிக்கெட் ரசிகர்கள் யோசித்து நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் நாளில் ஒரு போட்டியை நடத்த முடியாவிட்டாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக நவம்பர் 16ஆம் தேதி இருக்கும். இதற்கிடையில், நவம்பர் 16 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அரையிறுதி போட்டிக்கான ரிசர்வ் நாள் நவம்பர் 17 ஆகவும், நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாள் நவம்பர் 20 ஆகவும் இருக்கும்.

ரிசர்வ் நாளில் கூட போட்டி நடைபெறவிட்டால் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் அரையிறுதிப் போட்டியும் மழையால் தடைபட்டது. அதன் பிறகு போட்டி ஒரு ரிசர்வ் நாளில் முடிந்தது. இதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மறுபுறம், நியூசிலாந்து ஆரம்பத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடியது. ஆனால் பின்னர் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மோதல் எப்படி இருக்கும் என்பது இப்போது சுவாரஸ்யமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI