ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..! ராஜஸ்தான் அணியின் வெற்றி பயணத்தை தடை செய்யுமா குஜராத்?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது.

நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 24-வது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் ஒரு ரைவல்ரி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இந்த போட்டிக்கு இருந்து வருகிறது.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் தலா 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது அதில் 4 முறை குஜராத் டைட்டன்ஸ் அணியும் 1 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் :

ராஜஸ்தான் அணி வீரர்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்

குஜராத் அணி வீரர்கள்

ஷுப்மன் கில் (கேப்டன்), ஷரத் BR (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா

Published by
அகில் R

Recent Posts

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

15 minutes ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

31 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

57 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

1 hour ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

2 hours ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago