நாளை நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது.
U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.
2016-ம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டி வந்துள்ளது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இந்தியா 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கோப்பையை வென்றது. இதுபோன்ற சூழ்நிலையில், கோலி தனது அனுபவத்தை 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் கவுஷல் தம்பே ஆகியோருடன் ‘ஜூம்’ அழைப்பில் பகிர்ந்து கொண்டார். அப்போது, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கரும் உடன் இருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையை இங்கிலாந்து அணி ஒரு முறை வென்றுள்ளது. 1998-ஆம் ஆண்டு இறுதி போட்டியில் நியூஸிலாந்து உடன் இங்கிலாந்து மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது இல்லை. இந்த வருடம் தான் இங்கிலாந்து இறுதிப்போட்டி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…