கிரிக்கெட்

உலகக்கோப்பை யாருக்கு..? 20 வருட பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா..?

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

அதே ஆடுகளம்:

நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும் இறுதிப் போட்டியின் ஆடுகளம் முன்பு  இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த லீக் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் மற்றும் சுமார் 9.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மைதானத்தில் சேஸிங் பேட்டிங் செய்யும் அணிக்கு சில நன்மைகள் உள்ளன. ஏனெனில் கடந்த 10 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் 6-ல் வெற்றி பெற்றுள்ளன.

பந்து வீச்சாளர்களுக்கும் இந்த மைதானம் உதவிகரமாக இருக்கும். உலகக் கோப்பையின் லீக் போட்டிகள்  மொத்தம் 4 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 35 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டி கணிப்பு:

லீக் சுற்றில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் இந்திய அணி இதுவரை தோல்வி அடையாமல் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

20 வருட கணக்கு:

 இரு அணிகளும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிபோட்டியில் மொத்த உள்ளனர். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.  இன்றைய இறுதிப்போட்டியில் இந்திய வெற்றி பெறும் வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக கோப்பை கைப்பற்றும். அதுவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றும்.

2 முறை கோப்பை கைப்பற்றிய இந்தியா:

இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக்கோப்பையை வென்றது. அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முன் கபில்தேவ் தலைமையில் 1983-இல் நடந்த உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்திய அணி கணிப்பு லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணி கணிப்பு லெவன் :

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

14 hours ago