இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.முதல் நாளான இன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுதான் இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
டுட்டு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஆளுமை நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர். ஆப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனப் பிரிவினை மற்றும் பாகுபாடு கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.அவரது முயற்சிகளுக்காக, டுட்டுவுக்கு 1984 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இன்று அவர் தனது 90 வது வயதில் காலமானார்.
இது பற்றி ஜனாதிபதி ரமபோசா கூறுகையில் , டுட்டு “ஒரு ஆன்மீக சின்னம், நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் மற்றும் உலகளாவிய மனித உரிமைப் பிரச்சாரகர் ஆவார். சமமற்ற தேசபக்தர்; கிரியைகள் இல்லாத விசுவாசம் இறந்துவிட்டது என்ற விவிலிய நுண்ணறிவுக்கு அர்த்தம் கொடுத்த கொள்கை மற்றும் நடைமுறைவாதத்தின் தலைவர்” என்று புகழ்ந்துள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 46 ரன்களுடனும் ,கேஎல் ராகுல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இந்திய அணி விக்கெட் இழப்பின்றி உணவு இடைவெளிக்கு முன்னர் வரை 83 ரன்களை எடுத்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…