LSGvsDC [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை டெல்லி அணி பெறுவார்கள் இல்லை என்றால் தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூடி விடும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு டெல்லி அணி கடுமையாக போராடுவார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஃபார்ம் சற்று மோசமாகவே இருந்து வருகிறது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய வீரர்கள் மட்டும் தான் சிறப்பாக விளையாடிகிறார்கள். இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி அதில் 1 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.
அதே போல லக்னோ அணியும் மேற்கொண்டு தொடரில் நிலைபெற்று இருக்க இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லக்னோ அணியின் மாயங்க் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவாரா என்று நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
இது வரை இந்த இரண்டு அணிகளுக்கு இடையே 3 முறை போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 3 முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெற்றியின் விகிதம் படி பார்க்கையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி வீரர்கள் :
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்.
டெல்லி அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அபிஷேக் போரல், ரிஷப் பந்த்(கேப்டன் /விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…