ind vs aus test [Image source: file image ]
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 7-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது.
மேலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்,ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இங்கிலாந்தில் தீவீரமாக பயிற்சி எடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, இறுதிப் போட்டிக்கு சிவப்பு நிற கூகபுரா பந்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது, டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அணியை போலவே மற்றோரு பக்கம் ஆஸ்திரேலிய அணி ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…