SPAIN IS EUROPEAN CHAMPION FOR A RECORD FOURTH TIME
யூரோ கோப்பை : கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இன்று பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியத்தில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியின் முதல் பாதியான 45 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்காமல் இருந்தனர். முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்கினாலும், சற்று தோய்வுடனே சென்றது. அதன்பிறகு தொடங்கிய 2-ஆம் பாதியில் 2 அணிகளும் மிக தீவிரமாக கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள்.
சரியாக 47’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான நிகோ வில்லியம்ஸ் அசத்தல் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெரும். அதனை தொடர்ந்து போட்டியின் 73’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வீரரான பால்மர் மிரட்டலாக சமன் கோலை அடிப்பார்.
இதன் மூலம் 1-1 என போட்டியானது சமநிலையில் சென்று கொண்டிருக்கும், போட்டியின் 86’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான குக்குரெல்லா அமைத்து கொடுத்த அருமையான வாய்ப்பை ஸ்பெயின் அணியின் சக வீரரான ஒயர்சபால் அசத்தலான கோலை அடிப்பார்.
இதனால் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெரும், மீதம் இருந்த 4 நிமிடங்களில் இங்கிலாந்து அணி முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால், 90′ நிமிடம் முடிந்து போட்டி முடிவடையும் போது ஸ்பெயின் அணி 2-1 என போட்டியை வெற்றி பெற்றது.
இதன் காரணமாக ஸ்பெயின் யூரோ கோப்பை 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும், ஸ்பெயின் அணி இந்த யூரோ கோப்பை தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளனர். இதனால், அதிக முறை யூரோ கோப்பை வென்ற அணியாகவும் ஸ்பெயின் அணி (4-வது முறை) மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…