டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் இளவேனில் வலரிவன் மற்றும் அபுர்வி சண்டேலா தகுதி பெறத் தவறிவிட்டனர்.
முதல் இடம்:
இதனையடுத்து,டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஆண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில்,இந்தியாவின் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும்,சவுத்ரி முதலிடத்தைப் பிடித்தார்.மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் பெற்று 17 வது இடம் பிடித்ததால்,போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதிர்ச்சி:
இந்நிலையில்,ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 137.4 மதிப்பெண்களுடன் 7 வது இடத்தைப் பிடித்ததால்,பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.இது இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவுள்ளது.
மேலும்,இப்போட்டியில் ஈரான் வீரர் ஜாவித் ஃபரூக்கி 244.8 மதிப்பெண்களுடன் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…