Vaishali R [Image source : X/@ChessbaseIndia]
இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும். இது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். இதில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள்.
அதன்படி, இந்த கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவாவை வைஷாலி வீழ்த்தினார்.
இதனால் அவர் 7 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதையடுத்து முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை எதிர்கொண்டு அவரைத் தோற்கடித்தார். இந்த 10-வது சுற்றில் வெற்றி பெற்றதால் 7.5 புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்த வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.
உக்ரேனியாவின் அன்னா முசிச்சுக் 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். மேலும், வைஷாலி ஃபிட் கிராண்ட் சுவிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் வெற்றி பெற இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் 11-வது மற்றும் இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை எதிர்கொள்கிறார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…