காட்டடி அடித்த ஹிட்மேன் மற்றும் கிங் கோலி..!ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்த இந்திய அணி.!

Published by
murugan
  • இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இன்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் சரியான தொடக்கத்தை அமைக்காமல் வார்னர் 3 ,பின்ச் 19 ரன்களிலும் வெளியேறினார்கள்.இதன் பின்பு வந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 4,ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்.

ஆட்டம் தொடக்கத்திலேயே கே.எல் ராகுல் 19 ரன்களுடன் வெளியேற பின்னர் இந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர்.

இவர்களின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது .அதிரடியாக விளையாடிய விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 140  ரன்கள் மேல் அடித்தனர். பின்னர் ரோகித் சர்மா 119 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்து 89 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இறுதியாக இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Published by
murugan
Tags: INDvsAUS

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

38 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

1 hour ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

3 hours ago