19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom) நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல் பலம் வாய்ந்த நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்குள் நுழந்ததுள்ளது. இந்நிலையில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அணி விபரங்கள்:
இந்தியா யு19 (playing 11): யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா, பிரியாம் கார்க் (கேப்டன்), துருவ் ஜுரேல் (wk), சித்தேஷ் வீர், அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், சஷ்வத் ராவத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங்.
பங்களாதேஷ் யு19 (playing 11): பர்வேஸ் ஹொசைன் எமோன், டான்சிட் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், தோஹித் ஹிர்டோய், ஷாஹாதத் ஹொசைன், அவிஷேக் தாஸ், அக்பர் அலி (கேப்டன்/wk), ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், டான்சிம் ஹசன் சாகிப்.
இதனிடையே ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்தோடு வங்கதேசம் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. இந்த போட்டி அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…