IndvsAus [Imagesource : X/@RAHUL__KL]
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ்க் மற்றும் வார்னர் களமிறங்கினர்.இதில் ஷமி வீசிய பந்தில் மிட்செல் மார்ஷ்க் 4 ரன்களில் வெளியேற, வார்னர் நிதானமாக விளையாடினார். அவருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து விளையாடிய வார்னர் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், லாபசன் இணைந்து விளையாடினார்கள். மீண்டும் ஷமி தனது அட்டகாசமான பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்தின் (41 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அணியில் இடம் பிடித்த அஸ்வின், லாபசனின் (39 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி தனது திறமையைக் காட்டினார்.
இதன்பிறகு கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஸ்டோனிஸ் போட்டியைத் திறம்பட விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதாக சோபிக்காமல், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் முகமது ஷமி தனது திறமையால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதற்கிடையில், முதல் இரண்டு போட்டிகளில் உலகக்கோப்பைக்காக, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஎஸ் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி, 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…