இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் என தகவல் வெளியானது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, விளையாட்டு போட்டிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி ஐபிஎல் 2020 தொடர் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் எனவும், இந்த போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்த அங்கீகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு விமானங்களை வாடகைக்கு எடுக்கவும், ஹோட்டல்களை புக் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…