புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

Published by
அகில் R

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது.

எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

போட்டியில் தொடர்ந்து விறுவிறுப்பாக இரு அணிகளின் வீரர்களும் விளையாடினார். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மீண்டும் ஃபில் ஃபோடென் தனது அணிக்காக போட்டியின் 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனால் 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை வகித்தது. எதிர்த்து கடினமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் அணி போட்டியின் 42-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெஸ்ட் ஹாம்  அணி வீரர் முகமது குடுஸ் அசத்தலாக கோலை அடித்தார்.

இதனால் முதல் பாதி நிறைவு பெறுகையில் 2-1 என்ற கண்ணகில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து அனல் பறக்க தொடங்கிய இரண்டாம் பாதியில், போட்டியின் 52-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ரோட்ரி அணியின் 3-வது கோலை பதிவு செய்தார். இதனால் 3-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி மேலும் முன்னிலை வகித்தது.

அதன் பிறகு வெஸ்ட் ஹாம் அணி கடுமையாக முயற்சி செய்தும் ஒரு கோலை கூட பதியிலடியாக பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக போட்டியின் முடிவில் மான்செஸ்டர் அணி 3-1 என்ற கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்கள். மேலும், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.

அத்துடன் முதலாவதாக இடம் பிடித்ததால் பரிசுத்தொகையாக 62.3 மில்லியன் பவுண்டுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்த ஆர்செனல் அணி 59.1 மில்லியன் பவுண்டுகளையும், 3-வது இடத்தை பிடித்த லிவர்பூல் அணி 56 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 4-வது இடத்தை பிடித்த ஆஸ்டன் வில்லா 52.9 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago