எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா விருதுகளும் மற்றும் துரோணாச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
அர்ஜுனா விருதுக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது அவருக்கு அறிவிக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ‘ அனைத்து வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்பது கனவு. ஏனென்றால், விளையாட்டு வீரர்கள் ஆபத்தில் தங்களை ஈடுபடுத்துக்கொள்கிறார்கள். எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். மல்யுத்த பிரிவில் எனக்கு அர்ஜுனா விருது வாங்க இன்னும் தகுதி வரவில்லையா.’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…