வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள் தொடர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 288 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், களத்தில் விளையாடும் வீரருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்க வேண்டியது அவசியம். சென்னை ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.நான் என் ஆட்ட திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். தினமும் அதற்கான பயிற்சியும் செய்து வருகிறேன். போட்டியில் எனக்கு ரன்னும் , நம்பிக்கையும் கிடைத்தது. தோனியின் பெயரை மைதானத்தில் உச்சரித்தாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என கூறினார்.
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…
திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…