விம்பிள்டன் 2023: நாளை அனல்பறக்கும் இறுதிப்போட்டி… முதல் முறையாக நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் மோதல்!

Published by
பாலா கலியமூர்த்தி

விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனர்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிகமுறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர் என்ற சாதனையை நோவக் ஜோகோவிச் படைத்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் உலகின் 8ம் நிலை வீரரான ஜானிக் சின்னரைத் வீழ்த்தி 9வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும், 35வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். 36 வயதான நோவக் ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் இறுதிப் போட்டியை எட்டிய சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் (34) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கிறிஸ் எவர்ட் சாதனையை முறியடித்தார். இதுபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான டேனியல் மெட்வடேவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

20 வயதான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் 6-3, 6-3, 6-3 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களில் வெற்றி பெற்றார். எனவே, ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ், உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனர்.

விம்பிள்டனில் கார்லோஸ் அல்கராஸ், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாட விரும்புவதாக பலமுறை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் தனது முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர். 2 ஜோகோவிச்சை சந்திக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

2 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

2 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

4 hours ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

4 hours ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

5 hours ago