zaheer khan [File Image]
ஜூன் 2 ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக யார் விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது.
ஒரு பக்கம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்றும் மற்றோரு பக்கம் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அதில் இருந்து சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி பேச இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”
ரிஷப் பந்தின் பயணத்தைப் நாம் திரும்பி பார்த்தால், அவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு எளிதானது அல்ல. அந்த அளவிற்கு அவர் மிகவும் நல்ல வீரர் சிறப்பாக விளையாடி நல்ல இடத்தை பிடித்து இருக்கிறார். ரசிகர்களை போலவே எனக்கும் விருப்பம் என்னவென்றால், அவர் திரும்பி வந்து விளையாட வேண்டும் என்பது தான்.
சதம் விளாசி சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில், என்னை பொறுத்தவரையில் இது எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால், அவர் காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சி எடுத்து வருகிறார். அவர் பழையமாதிரி விளையாடி திரும்பி வருவதற்கு இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகும். அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் ” எனவும் ஜாகீர் கான் கூறியுள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…