பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் உதவியுடன் கைப்பற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்தார். என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பண்டிகை கால பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பேசினார். அதில், கடந்த 2019 தொடக்கத்தில் 14 வகை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல, மத்திய அரசும் […]
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடலநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரயிலில் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி விருப்ப மனு கொடுத்துள்ளார். அதே போல அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட பலரும் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதில் , புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி பொறுப்பாளராக கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி […]
அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், கடந்த […]
அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா […]
கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் […]
வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக […]
சென்னையில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 2021 பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.1.98 கோடி பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார். விளையாட்டுத்துறை மற்றும் மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், […]