திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜூலை 2 அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]