நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் உமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. இந்த தேர்தலில் நவாஸ் […]
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் […]
பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமாராக இம்ரான் கான் இருந்த காலத்தில் அயல் நாட்டு பிரதமர்கள் உட்பட பலர் கொடுத்த பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றசாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான் கானிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொதுப்பணியில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது. இந்த நிகழ்வில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். […]
உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள் என இம்ரான்கானுக்கு மரியம் நவாஸ் அறிவுரை. நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார். அதே சமயம், ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும், சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்காவால் […]
342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 172 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இன்று வாக்கெடுப்பு. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிலையில்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது […]
பாகிஸ்தான்:நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என பாக்.ஜனாதிபதிக்கு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த,பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில்,பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. துணை சபாநாயகர் அறிவிப்பு: இதனால்,பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் சற்று முன்னர் அறிவித்திருந்தார். தீர்மானம் நிராகரிப்பு: இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இம்ரான் […]