இன்று வாக்கெடுப்பு-சிக்சர் அடிப்பாரா பாக்.பிரதமர் இம்ரான் கான்?..!

342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 172 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இன்று வாக்கெடுப்பு.
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 172 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.இதனிடையே,கடைசி பந்து வரை விளையாடி பிரச்சனையை சமாளிப்பேன் என்று கூறிய இம்ரான் கான் இன்றைய வாக்கெடுப்பில் சிக்சர் அடிப்பாரா? அல்லது விக்கெட்டை இழந்து பதவி விலகுவாரா? என்பது பின்னர் தெரிய வரும்.இதற்கிடையில்,இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதால் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025