”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது நான் கோபமாக உள்ளேன் என்று கே.டி – தி டெவில் பட விழாவில் ஜாலியாக பேசிய நடிகர் சஞ்சய் தத் பேசியிருக்கிறார்.

சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ”படத்தில் தனக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததால், லோகேஷ் மீது அதிருப்தி அடைந்ததை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். சென்னையில் துருவா சர்ஜா தலைமையில் நடைபெற்ற நட்சத்திரங்கள் நிறைந்த கே.டி – தி டெவில் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் உடனான தனது உறவையும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், “நான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மதிக்கிறேன், அவர்கள் என்னை விட மூத்த நடிர்கள். நான் அவர்களைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன், நான் ரஜினிகாந்துடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் எளிமையான நபர். அதே நேரம், தளபதி விஜய்யுடன் பணியாற்ற நான் மிகவும் விரும்பினேன்.
ஆனால், நான் லோகேஷ் கனகராஜ் மீது கோவமாக உள்ளேன். லோகேஷ் எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தை வழங்காததால் நான் அவர் மீது கோபமாக இருக்கிறேன். அவர் என்னை வீணடித்துவிட்டார். ‘லியோ’ திரைப்படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை என் திறமையை சரியாக பயன்படுத்தவில்லை” என்றார்.
கே.டி – தி டெவில்
இயக்குநர் ரேம் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கே.டி – தி டெவில்” திரைப்படத்தில், துருவா சர்ஜா, சஞ்சய் தத், ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ஷில்பா ஷெட்டி மற்றும் ரீஷ்மா நானையா ஆகியோர் நடித்துள்ளனர். கே.டி – தி டெவில் படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார், கே.வி.என் புரொடக்ஷன்ஸின் கீழ் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ளார்.