இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு கொரோனா பரவும் வேகத்தை சற்று குறைத்துள்ளது எனலாம். உலக வல்லரசான அமெரிக்கா மற்றும் இத்தாலியின் நிலையை காட்டிலும் மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிப்பதால் தொற்றின் வேகம் அதிகரிக்கவில்லை என்கின்றனர் பன்னாட்டு ஆய்வாளர்கள். இந்நிலையில் தமிழகத்திலும் ஊரடாங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி, பேருந்து, ரயில் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. […]