கட்சி நிகழ்ச்சிகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அரசு ஊழியர்களை, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதையும், அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள், தமிழக […]
சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், ரொனால்டோ அணியில் இணைவதற்கு முன் அவருக்கான மெடிக்கல் டெஸ்ட்டை அட்டவணையிட்டுள்ளதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், போர்ச்சுகல் அணியின் ரொனால்டோவை தங்கள் கிளப்பில் இணையுமாறு கேட்டுள்ளதாகவும் அதற்கு ரொனால்டோ, மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார். இந்த நிலையில் அல்-நசர் கிளப், ரொனால்டோவிற்கான மருத்துவ பரிசோதனையை அட்டவணையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை வருட […]