மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் கொல்லப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேல் மாவட்டத்தில் நேற்றிரவு (மே 14 அன்று) ஆயுதமேந்திய குழுவினர் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவல் […]