ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 20 வயதுடைய ஒரு வாலிபர் நகர் வீதியில் கத்தியுடன் வலம் வந்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அந்த வாலிபர் அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் 24 வயது இளம்பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் […]
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லக்கூடிய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்றிரவு முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா பரவல் […]
ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் 2022-ஆம் ஆண்டில் பாதி வரை முழுமையாக திறக்கப்படாமல் போகலாம். உலகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் தங்கள் நாடுகளில் தொற்று அதிகரிப்பை தவிர்ப்பதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியா சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்த வைரஸ் […]
முன்னாள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேகில் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த 14ம் தேதி 50 வயதான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மேகில் சிட்னியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே கடத்தப்பட்டு, நகரின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் தாக்கப்பட்டு, துப்பாக்கியால் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தலை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஸ்டூவர்ட் மேகில் பெல்மோர் பகுதிக்கு […]
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனையடுத்து,ஆஸ்திரேலிய நாடும் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது.இருப்பினும்,இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல் மற்ற பிற நாடுகளின் வழியாக மக்கள் பலபேர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் […]
இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி. இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இந்த நிலையில், பிஎம்கேர்ஸ் நிதிக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய […]
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால், தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்ச பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கும் மத்தியில் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக […]
ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிகவும் மும்முரமாக களம் இறங்கியது. அந்த வகையில் தற்போது சில தடுப்பூசிகளை உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று […]
நாடாளுமன்றத்தில் வைத்து சக ஊழியர் ஒருவரால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கோருவதாக கேட்டுக் கொண்டுள்ளார். கடந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி ரொனால்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரிட்டானி ஹென்னக்ஸ் எனும் பெண் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் முறையாக அப்போது […]
நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது – வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற மக்கள். உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் இன்று மாலை சுமார் இந்திய நேரப்படி 4.20 க்கு 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என முழக்கங்களையிட்டு உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது. […]
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பி 2.51 கோடி ரூபாய் ஏலம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அந்நாட்டு வியாபாரி ஒருவர் 450,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு சுமார் 2.51 கோடி ரூபாய் ஏலம் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிராட்மேனின் பச்சை நிற தொப்பியை 1928 ல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 60000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்ததாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 60000-க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் உயிரிழந்ததாக உலகளாவிய நிதி அமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது . ஆஸ்திரேலியாவின் 59 மில்லியன் ஏக்கரிலான பகுதிகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு ,அதில் 33 பேர் பலியானார்கள் .மேலும் இந்த காட்டு தீயால் 3 பில்லியனுக்கும் அதிகமான வனவிலங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் கங்காருகள் […]
ஆஸ்திரேலியாவின் ஃப்ரேசர் தீவில் புதர்த்தீ வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய-பட்டியலிடப்பட்ட ஃப்ரேசர் தீவில் சுற்றுலா பயணிகள் குளிர் காய்வதற்காக மூட்டிய நெருப்பு புதிர் தீயாக மாறியது. 7 வாரங்களாக கட்டுக்கடங்காமல் எரியும் தீயால், அந்த தீவில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட காடுகள் கருகி சாம்பலாகின. நேற்று பிற்பகல் இந்த தீ விபத்து தீவிரமடைந்துள்ளது. இதனால் ஃப்ரேசர் தீவில் 90க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 38 வாகனங்கள் மற்றும் 17 விமானங்கள் தீயை கட்டுப்படுத்தும் […]
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் நேற்று சுறா மீன் தாக்கப்பட்டு ஒரு அலை சறுக்கு வீரர் காணவில்லை. இந்த சம்பவம் நேற்று காலை ஆஸ்திரேலியா எஸ்பெரன்ஸ் அருகே கெல்ப் பெட்ஸ் கடற்கரையில் ஏழு மணி நேரமாக அலை சறுக்கு பயணத்தில் சுறாவால் தாக்கப்பட்டார் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள அலை சறுக்கு வீரர் (Surfer) ஒருவர் அந்த நபருக்கு உதவ முயன்றார், ஆனால் அவரை தண்ணீரிலிருந்து இழுக்க முடியவில்லை என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் […]
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தின் புனித தளமான உலுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா நேற்று உலகின் மூன்றாவது சிறந்த இடங்களாக பார்க்கப்பட்டது. இந்த வருட லோன்லி பிளானட்டின் உலகில் காணக்கூடிய சிறந்த இடங்களின் பட்டியலில் இதுவும் இடம்பெற்றது. இது, உலகளாவிய பயண வழிகாட்டியின் ‘அல்டிமேட் டிராவல் லிஸ்ட்’ புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா, பழங்குடியின கலாச்சாரத்துடன் பயணிகளை இணைக்கும் திறனுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், உலக பாரம்பரிய தளமான உலுரு, பெரிய […]
முற்காலத்தில் மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலையில், இயற்கையையும் ஒரு உயிராக கருதி அவைகளை அழிப்பதற்கு முயற்சிக்காமல், அவைகளை வளர்ப்பதற்கு முயற்சித்தனர். ஆனால், இன்று உயிரினங்கள் அளிக்கப்படுவதோடு, அவைகளின் வாழிடமும் சூறையாடப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக காணப்பட்ட விலங்கு, ‘டாஸ்மேனியன் டெவில்’. இந்த இனம் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க, இனப்பெருக்கம் செய்து வைத்து, 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய பூங்காழி விடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தின் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனையை அதிகரிக்கபடும் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகள் இன்று ஒன்பது பேராக குறைந்துவிட்டது. இதற்கு முந்தைய நாட்களில் இது 12 ஆக இருந்தது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் கிடையாது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது 20 மற்றும் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 145 […]
காதலியின் பிறந்தநாளுக்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவர் ஹோட்டலில் இருந்து தப்பித்து விதிமுறைகளை மீறி வெளியே நடனமாடியதால் 6 மா த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவர்களும், கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டாலும் அவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூசுஃப் […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி இப்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தடுப்பூசிக்காக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் ஆஸ்திரேலியா ரூ.135 கோடி மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. […]