17 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை உயிரிழந்ததாக வீட்டருகில் புதைக்கப்பட்டுள்ளதால், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உற்பத்தி புதுவயல் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 17 வயது சிறுமி ஒருவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த திருச்செல்வம் எனும் 23 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செல்வம் வெளியே வந்துள்ளார். திருச்செல்வத்தின் பலாத்கார வழக்கில் […]