சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கனமழை பெய்ததால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இன்று (டிசம்பர் 2) சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் ரயில், தேஜஸ் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பாண்டிச்சேரி MEMU ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே […]
சென்னை: சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனையடுத்து, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் நலன் விசாரித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொளத்தூரில் […]
சென்னை : சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் புயலின் தீவிரம் இப்போதே தெரியத் தொடங்கியிருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றினால் மரங்கள் அங்கும் இங்கும் ஆடுகின்றன. புயல் கரையைக் கடக்கும் வரை இப்படியான தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் , புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை […]
சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் […]
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. எனவே, இந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படக்கூடிய விவரம் பற்றிய தகவலையும் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி… கோவை : மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், கடலூர் : தட்டாஞ்சாவடி, திருவதிகை, […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளையும் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய தகவலையும், தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,… மின்தடை […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், ‘நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் மக்கள் யாரும் அச்சப் பட வேண்டாம் எனவும்’ அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை மற்றும் சென்னை வானிலை மைய இயக்குனரகம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தாலும், தனியார் வானிலை ஆர்வலர்களும் தற்போதைய வானிலை […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் […]
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள […]
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் நகர்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், சென்னை, […]
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று (நவம்பர் 27ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், […]
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை கீழே பார்த்து குறித்துவைத்து கொள்ளுங்கள்… சென்னை வானிலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுபெறவுள்ள காரணத்தால் சென்னையில் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 29-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் […]
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பொது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், மழையின் தீவிரம் வேகமெடுத்து இருப்பதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து […]
டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா […]