அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில் மழை பெய்து கொஞ்சம் குளிர்வை ஏற்படுத்தியிருந்தது. டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் இடியுடன் மழை பெய்து வருகிறது. இதனிடையே, மே 4ஆம் தேதி முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் மழை
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மதியம் 3 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.