கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என முதற்கட்ட தகவல் வெளியானது. கடந்த 6 நாட்களாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம் நசரத்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மற்றும் சித்ராவின் தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தில் […]