சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் மூலம், மத்திய அரசால் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் தொடங்கப்படவுள்ள ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டங்கள், தமிழகத்தின் உட்கட்டமைப்பு, போக்குவரத்து, மற்றும் மின் பரிமாற்றத் துறைகளை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும். அவர் தொடங்கி வைக்கவுள்ள திட்டங்கள் குறித்து விவரமாக பார்ப்போம். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் […]
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஜூலை 27, 2025 அன்று நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில், பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுவார். இது தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் தருணமாக உள்ளதாக, தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் […]