ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பயன்படுத்திய முக கவசத்தை வீசியும், சிறுநீர் கழித்தும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி […]
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக கூலிப்படையினர் மூலம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்படாத கூறப்பட்டது. பட்டப்பகலில், மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொலை, சிசிடிவி […]
சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த […]