#Breaking: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!

Default Image

சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கைதான 10 பேரில் ஐயப்பன் சரணடைந்த நிலையில், 9 பேரும் குற்றவாளிகள் என முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக கூலிப்படையினர் மூலம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்படாத கூறப்படுகிறது. பட்டப்பகலில், மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொலை, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது  நீதிமன்றம் தீர்ப்பில் தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்