சென்னை : ஈசிஆர் சாலையில் காரில் பயணித்த பெண்களை, மற்றொரு காரில் பயணித்த ஓர் கும்பல் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி தற்போது அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த காரில் குறிப்பிட்ட கட்சிக்கொடி பொறுத்தப்பட்டிருப்பதால் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. […]
சென்னை : தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ. அந்த வீடியோவில் பெண்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே, குறிப்பிட்ட கட்சிக் கொடி பொருத்தப்பட்ட ஒரு கார் அவர்களை சாலையில் வழிமறிக்கிறது. அதனை அடுத்து அதில் இருந்து ஒரு நபர் ஓடி வருகிறார். இதனை கண்டதும் பதறிய அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து காரை வேறு பக்கம் திருப்பி சென்றனர். அப்போது காருக்குள் இருந்த பெண்கள் பதறியபடி அங்கிருந்து […]