ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்தனர்.இதனையடுத்து,நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதேபோல்,அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி சிலர் ஆபத்தான பயணம் செய்துள்ளனர்.விமானம் […]