ஆப்கானில் இருந்து தப்ப முயற்சி;இளம் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரி மரணம்…!

Default Image

ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்தனர்.இதனையடுத்து,நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதேபோல்,அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி சிலர் ஆபத்தான பயணம் செய்துள்ளனர்.விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே குடியிருப்பு பகுதியில் விழும் வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கின.

இந்நிலையில்,ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் இளம் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜக்கி அன்வாரி,காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய  யுஎஸ்ஏஎஃப் போயிங் சி -17 இலிருந்து விழுந்ததாகவும், அவரது மரணத்தை விளையாட்டுக்கான பொது இயக்குநரகம் உறுதி செய்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் அரியானா நேற்று தெரிவித்துள்ளது.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

19 வயதான இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக கால்பந்து விளையாடியவர் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்