சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் “100% பொய்யானவை” என்று கூறியுள்ளார். தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு […]
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் நேற்றைய தினம் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருவரும் பூரணமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என […]
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் வலுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 5) இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது. ஆம், ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தைலாபுரத்தில் நேற்றைய தினம் சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றயை தினம், ராமதாஸ் […]
சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு ராமதாஸ் பொருளாளர் உள்ளிட்டோரை நீக்குவதும் ஆலோசனை நடத்துவதும் பாமக பிளவை நோக்கி செல்வதை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டாம் நாளாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். இது ஒரு […]
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வருகை தந்தனர். அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்துள்ளனர். குறிப்பாக, நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் […]
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்க சேலம் வந்துள்ளனர். இதற்காக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலம் […]
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி […]
சென்னை : அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நிகழ்ந்ததா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசு முழுதாக மறுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்விவகாரம் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டார். இந்நிலையில் இன்று, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து […]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வந்தனர். அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில், முன்னதாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு நிறைவேற்றப்பட்டு இருந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் சாதிவாரி கனக்கடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் […]
இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.? எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு […]
நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். – பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி. நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டவை தான். அப்படி மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார் . அதாவது, நிர்வாக வசதிக்காகவும், […]
பாட்டாளி மக்கள் கட்சி கீழ்வேளூர் தனி தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு அனைத்தும் முடிந்து தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், அனைத்து கட்சியினர் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,பா.ம.க தலைவர் ஜி.கே.மணி […]