ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம். இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 331 ரன்கள் எடுத்தனர். […]