வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என கூறப்பட்ட நிலையில், இன்றே உருவானதாக இந்திய வானிலை மையம் தகவல். வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]