சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லை கே.டி.சி. நகர் பகுதியில் கடந்த ஜூலை 27-ம் தேதி அன்று பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, காதல் விவகாரம் மற்றும் சாதி வேறுபாடு காரணமாக நிகழ்ந்த ஆணவக் கொலையாகக் கருதப்படுகிறது. கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த […]