கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில், மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி […]
காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் எங்களின் வாழ்வாதாரம் சீர்குலையும் எனவும் கூறி கிராம […]