லியோ படத்தின் FDFS காட்சி டிக்கெட் போல, அச்சு அசலாக போலியாக தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்த நிலையில், மதுரை கோபுரம் திரையரங்கு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. இந்நிலையில், மதுரையில் லியோ படத்திற்கான சிறப்பு காட்சி எனக்கூறி போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது திரையரங்கதிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி டிக்கெட் வாங்கி […]