நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் இரு கட்சிகளும் ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை […]
பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் […]
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்தில் வந்திருந்தனர். கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 11 மணி வரை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தாங்கள் கேட்ட எண்ணிக்கைக்கு மிகக் குறைவான தொகுதி திமுக தரப்பில் ஒதுக்குவதாக தெரிவித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி என தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை முடிந்த […]
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜன் . மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியானது .அதில் தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை என 2 […]