திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று நாள் மறியல் போராட்டத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் இன்று (ஆகஸ்ட் 1, 2025) உடலைப் பெற்றுக்கொண்டனர். கவினின் தந்தை சந்திரசேகர், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணவேணி (கிருஷ்ணகுமாரி) கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, காவல்துறையின் உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கவினின் உறவினர்கள் உடலைப் […]
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி மாநகரில், பாளையங்கோட்டை பகுதியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (நெல்லை கே.டி.சி. நகரில் சித்த மருத்துவராக பணிபுரியும்) காதலித்து வந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆணவக் கொலை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதன்மைக் குற்றவாளியாக சுர்ஜித் (வயது 24), கைது செய்யப்பட்டார். […]